தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு கிழக்கு முதல் தெரு சுல்தானா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்சு(22), ஜாபியா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவரது கணவர் முகமது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கூலி வேலைக்கு சென்று சுல்தானா தனது மகள்களை வளர்த்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜாபியா தனது தாயும், அக்காவும் வாயில் நுரை தள்ளியபடி மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சம்சுவம், நேற்று சுல்தானாவும் உயிரிழந்தனர். முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில் சுல்தானா கூறியதாவது, மகளுக்கு திருமணம் செய்ய வரம் பார்த்து வந்தேன். எனக்கும் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. மூத்த மகள் வறுமையால் திருமணம் வேண்டாம் என கூறினார். இதனால் மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்து பாலில் விஷம் கலந்து குடித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மற்றும் அக்காவை இழந்து ஜாபியா கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.