சென்னை விமான நிலையத்தில் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.
மராட்டிய மாநிலத்திலுள்ள புனேவை சேர்ந்த டைட்டல் மேத்தா என்பவர் மங்களூரிலிருந்து சென்னை வழியாக புனேச் செல்லும் விமானத்தில் சென்னைக்கு வந்தார். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு நிலையத்தில் இருந்து அதிகாலை செல்லும் புனே விமானத்திற்காக காத்திருந்தார்.
எதிர்பாரா விதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதனை செய்தார்கள். ஆனால் அவர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.