தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்திருந்தார். இப்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலின் லிரிக்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பாடலுக்கு ஷிவானி நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க