Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புது படம்…. வெளியான சூப்பர் தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஐசரிகணேஷ் தயாரிப்பில் வெளியாகிய எல்.கே.ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் புது படத்தை ஐசரிகணேஷ் அதிக பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் டிரைக்டு செய்கிறார்.

இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தை டிரைக்டு செய்து பிரபலமானவர் ஆவார். முன்னதாக இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஆதி நடிப்பில் தயாராகும் 7வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இதுவரை பெயர் வைக்கவில்லை. இவற்றில் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Categories

Tech |