Categories
உலக செய்திகள்

உங்கள் செல்லப்பிராணியிடம் தள்ளிருங்கள்… நாயையும் விட்டுவைக்காத கொரானா…அதிர்ச்சி தகவல்

ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து  நாய்க்கு கொரோனா வைரஸ் பரவிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும்.

 

இந்த வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மனிதர்களைத் தாக்கும் கொரோனா செல்லப்பிராணிகளுக்கும் பரவும் என்பது ஹாங்காங் பொமெரேனியன் நாய் மூலம் உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பில் தவிக்கும் பொமெரேனியின் நாயின் உரிமையாளரான 65 வயது மூதாட்டி, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

அவரிடம் இருந்து  நாய்க்கு கொரோனா பரவிருக்க வாய்ப்பு உள்ளது என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொமெரேனியன் நாயொன்றை நீண்ட நாள்களாக ஹாங்காங் அரசு கண்காணித்துவந்தது.

இந்நிலையில், நேற்று பரிசோதித்ததில் அது இருப்பது உறுதியானது. மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் இது அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இது குறித்து உலக அமைப்பின் விலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “கொரோனா பாதிப்படைந்துள்ள நாய் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

கொரோனா பாதிப்பு முற்றிலும் குணம் ஆகும் வரை தொடர்ந்து சிகிச்சைகள் நடைபெறும்” எனத் தெரிவித்தனர்.மனிதர்கள்  செல்லப் பிராணிகளிமிருந்தும் இடைவெளிவிட்டு இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

.

Categories

Tech |