மம்முட்டி நடித்த கிங் திரைப்படம் வெளியாகி 27 வருடங்களை தொட்டுள்ளது.
மலையாள சினிமாவில் சென்ற 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இயக்குனராக இருக்கின்றவர் ஷாஜி கைலாஷ். இவர் தமிழில் வாஞ்சிநாதன், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கடுவா திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது மோகன்லாலை வைத்து அலோன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது. சென்னையில் 27 வருடங்களுக்கு முன்பாக மம்முட்டியை வைத்து இயக்கிய கிங் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மம்முட்டிக்கு மிகப்பெரிய கமர்சியல் அந்தஸ்தையும் அந்த திரைப்படம் பெற்று தந்தது. தற்போது இப்படம் வெளியாகி 27 வருடத்தை பெற்றுள்ள நிலையில் அதை கொண்டாடும் விதமாக மம்முட்டியை நேரில் சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.