பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர் மகேஸ்வரி வெளியேறியிருக்கிறார். இதற்கு முன்னதாக ஷாந்தி, அசல்கோளார், ஷெரினா போன்ற போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள மகேஸ்வரி தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
Maheshwari after Eviction#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/EOSQKiEPpd
— Dr Kutty Siva (@drkuttysiva) November 14, 2022
அதில் “எனக்கு அன்புகொடுத்த அனைவருக்கும் நன்றி. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது எனக்கு மகிழ்ச்சிதான். தற்போது தான் தெரிந்து கொண்டேன் எவ்வளவு அன்பை நீங்கள் காட்டியுள்ளீர்கள் என்று. தன்னுடைய விளையாட்டை ஆதரித்தவர்களுக்கு நன்றி. இதேபோன்று எப்போதும் எனக்கு துணையாக இருங்கள்” என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.