Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள்…. எந்த நாட்டுக்கு போகிறார்கள்?…. பேட்டி கொடுத்த நளினி….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் இப்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சந்திக்க நேற்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேர் சிறப்பு முகாமிற்கு வருகை தந்தனர். சுமார் 6 மணிநேரம் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு இருக்கும் 4 பேருடன் விவாதித்துவிட்டு வெளியில் வந்த நளினி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நளினி பேசியதாவது, ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் யார் என்பது எனக்கு தெரியாது என அவர்கள் கூறினர். இதனிடையில் சிறப்பு முகாமும் சிறை போன்றதுதான். ஆகவே அதில் இருந்து 4பேரும் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்கு, அவர்களை அனுப்பிவைக்க வேண்டும் என அரசுக்கு நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையில் முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன் இலங்கைக்கு போக விரும்புகிறார். எனது கணவர் முருகன் உடன் நான் லண்டனுக்கு சென்று மகளுடன் வாழ விரும்புகிறோம். விடுதலையான பிறகும் திருச்சி சிறப்பு முகாமில் அழைக்கப்பட்டு இருப்பதால் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் போன்றோர் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர்.

முருகனைத் தவிர்த்து மற்ற 3 பேரும் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தாலும், அங்கு இருக்கிற பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சூழல்கள் அதற்கு இடம் கொடுக்குமா..? என்று தெரியவில்லை. ஆகவே அவர்கள் விரும்புகின்ற நாட்டுக்கு அவர்களை அனுப்பிவைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று நளினி கூறினார்.

Categories

Tech |