தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்து சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்பதால் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories