Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இனி மழை வெளுத்து வாங்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கன மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழக மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு எனவும் நவம்பர் 19ஆம் தேதி முதல் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |