மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.கே ரமேஷ். இவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜனவரி 23-ம் தேதி பிறந்தார். இவருடைய பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைநகரங்களிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தையும் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தேசிய விடுமுறை என்பது மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் என்று கூறினார். மேலும் மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றத்திற்கு தலையிடுவதற்கு உரிமை கிடையாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.