இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவலை அளித்த போது, இத்தாலிய சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 28 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதை தெரிவித்து இருந்தார். அதற்குப் பிறகு பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிந்தவுடன் இந்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே பல்வேறு இடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகத்துக்குரியவர்கள் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வந்து கொண்டிருந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட ஒருவரின் மாதிரி உறுதியாக கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் உள்ள அந்த நோயாளிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த 30 பேரில் ஏற்கனவே மூன்று பேருக்கு சிகிச்சை நடந்து , முழுமையாக நலம் பெற்று , கண்காணிப்பில் இருந்து பின்னர் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள் .
தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் 27 பேர். இதில் இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களுக்கு வாகன ஓட்டுநராக செயல்பட்ட ஒருவர் என 27 பேருக்கு தற்போது சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. சிகிச்சை முடிந்த பிறகும் கண்காணிப்பு தொடரும். கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.