பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா..? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஹர்தீப்சிங் பூரி பதில் கூறியிருப்பதாவது,
“பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசானது தயாராக இருக்கிறது. எனினும் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்கவேண்டும். அவ்வாறு மாநிலங்கள் சம்மதித்தால் அதனை செய்ய தயாராக உள்ளோம். ஆனால் மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பு இல்லை. இதை புரிந்துகொள்வது என்பது கஷ்டமில்லை” என்று அவர் கூறினார்.