தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அட்லி இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதால் தளபதி விஜயுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் மற்றும் பிகில் திரைப்படங்கள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அதன் பிறகு யோகி பாபு மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஷாருக்கானுக்கும் அட்லிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக ஒரு புதிய தகவல் இணையத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது ஜவான் திரைப்படத்தை ஷாருக்கான் தயாரிக்கிறார்.
இதனால் அட்லி படத்திற்கு ஓவர் செலவு செய்வது போன்று ஷாருக்கானுக்கு தோன்றியுள்ளதால் அட்லியை அவர் எச்சரித்துள்ளார். நீங்கள் செலவு செய்வது பிரச்சனை கிடையாது. ஆனால் செய்கிற செலவு எல்லாம் திரையில் நன்றாக தெரிய வேண்டும் என்று கூறியுள்ளாராம். இதனால் அட்லி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.