Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்!!… உயிரிழந்த பிரியாவின் உறவினர்கள் போராட்டம்….. பேச்சுவார்த்தையில் மருத்துவமனை முதல்வர்….!!!!!

உயிரிழந்த பெண்ணின்  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் படித்து வந்துள்ளார். மேலும் இவர் கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடியுள்ளார். இந்நிலையில் பிரியாவுக்கு திடீரென முட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியாயை  அவரது பெற்றோர் கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது கால் முட்டு பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதால் அறுவது சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் பிரியாவின் காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு  ஏற்பட்டதால் பிரியாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் பிரியாவின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறினர்.

மேலும் உடல் முழுவதும் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அறுவகை  சிகிச்சை செய்து காலை அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து காலை அகற்றியுள்ளனர். ஆனாலும் பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் பிரியாவிற்கு தவறாக அறுவகை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Categories

Tech |