Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லாரும் முதுகுல குத்திட்டாங்க”….. கோபத்தில் கொந்தளித்த மைனா நந்தினி….. பிக் பாஸில் நடந்தது என்ன?….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ராஜ வம்சமும், அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் படி போட்டியாளர்கள் 3 பிரிவுகளாக பிரிய வேண்டும். இதில் ராஜா குடும்பம், சேவகர்கள் உள்ளிட்ட பிரிவுகளை அசீம் வாசித்தார்.

அப்போது கதாப்பாத்திரங்களுக்காக ஒவ்வொருவரும் போட்டியிட்டனர். ஆனால் வாக்குகள் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ராணி முதல் கடைசி பொசிஷன் வரை மைனா நந்தினி போட்டியிட்டார். ஆனால் ஒருவர் கூட‌ மைனாவுக்கு வாக்களிக்கவில்லை. இதனால் அனைவரும் தன் முதுகில் குத்தி விட்டதாக மைனா கத்துகிறார். மேலும் தலையணையை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து செல்கிறார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |