விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்து சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்களிடம் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக பங்கெடுக்காத நபர் யார் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு விக்ரமன் ஜனனியின் பெயரை கூறினார். அவர் டிபென்ட்டாக இருப்பது போன்று தோன்றுகிறது என விக்ரமன் கூறினார்.
இதைக் கேட்டவுடன் ஜனனி கதறி அழுது என்னை விட்டு விடுங்கள் நானே வீட்டை விட்டு போய் விடுகிறேன் என்று அழுகிறார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையி,ல் சமூக வலைதள வாசிகள் மீம்ஸ் போட்டு ஜனனியை கலாய்த்து வருகிறார்கள். அதாவது விக்ரமன் அப்படி என்ன சொல்லிவிட்டார்னு இந்த ஜனனி கத்திக் கூப்பாடு போடுதுனு என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஸ்கூல் பிள்ளைய கூட்டிட்டு வந்தா இப்படித்தான் நடக்கும் என்றும் கமெண்ட் செய்கிறார்கள்.
இதனையடுத்து தற்போது நடிகர் விஜய் ஜனனியை காப்பாற்றுமாறு வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பீஸ்ட் படத்தில் வரும் குழந்தை முகத்தில் ஜனனியின் முகத்தை வைத்து எடிட் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு தாயிடம் இருந்து குழந்தையை பிடுங்கும் வில்லன் கத பாத்திரத்தின் முகத்தில் விக்ரமனை வைத்து எடிட் செய்திருக்கிறார்கள். மேலும் அந்த சமயத்தில் விக்ரமனை விஜய் எட்டி உதைத்து ஜனனியை காப்பாற்றுவது போன்ற வீடியோவானது இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இதை யார் எடிட் செய்தார்கள் வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.