இன்று தொடங்கிய முகாமிற்காக நேற்று இரவே காட்பாடியில் இளைஞர்கள் குவிந்தார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி விளையாட்டு மைதானத்தில் அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகமானது இன்று தொடங்கி வருகின்ற 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இதன் மூலம் அக்னிவீர், அக்னிவீர் சிப்பாய், தொழில்நுட்பம், உதவி செவிலியர், உதவி செவிலியர் கால்நடை, மத போதகர் ஆகிய பணியிடங்களுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற முகாமில் பங்கேற்பதற்காக நேற்று இரவு ஏராளமான இளைஞர்கள் காட்பாடியில் குவிந்தார்கள். ஏராளமான இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் வந்தார்கள். இதனால் நேற்றிரவு அங்கு நெரிசல் அதிகமாக காணப்பட்டது.