Categories
மாநில செய்திகள்

WOW: “உலகத் தரம் வாய்ந்ததாக கோவை ரயில் நிலையம்”…. ரயில்வே அமைச்சர் அதிரடி…..!!!!!

மத்திய ரயில்வே அமைச்சரான திரு.அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் வானதிசீனிவாசன் கடிதம் அளித்தார். இதையடுத்து கோவை இரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மாற்றுவதற்கு அமைச்சர் திரு.அஷ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். அந்த கடிதத்தில், கொரோனாவுக்கு முன்புவரை காலை 5:40 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு காலை 6:45 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும், கோவை -பொள்ளாச்சி ரயில் இயக்கப்பட்டது.

அதுபோன்று பொள்ளாச்சியிலிருந்து இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:45 மணிக்கு கோவைக்கு வந்து சேரும், பொள்ளாச்சி – கோவை ரயில் கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது. இதை மீண்டுமாக இயக்கவேண்டும் என்பது கோவை, பொள்ளாச்சி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். இதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும்  ரயில்நிலையங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் கோவை ரயில் நிலையத்தை, உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றவேண்டும். போதிய வாகன நிறுத்தும் இடம் ஆகிய வசதிகளுடன் வடகோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என கூறியிருந்தனர். அதனை தொடர்ந்து மத்திய அரசின் ரூபாய். 300 கோடி நிதியுதவி திட்டத்தின் கீழ் கோவை ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றப்படும் எனவும் வானதி சீனிவாசனிடம், அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

Categories

Tech |