நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இரண்டு கட்டங்களாக செமஸ்டர் முறையில் நடைபெற்றது. மாணவர்களின் பாட சுமையை குறைப்பதற்கு தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. கொள்குறி வகையில் 50 சதவீதம் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்ட தேர்வு நடைபெற்றது. இந்த வருடம் வழக்கம்போல தேர்வுகள் நடைபெற்ற வருவதால் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு நேரடி முறையில் வருகின்ற பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இருந்தாலும் பாடவாரியான தேர்வு கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு தேதி தாள் இணையதளத்தில் தற்போது பரவி வருகின்றது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணை சமூக வலைத்தளத்தில் பரவி வருவது முற்றிலும் போலியானது எனவும் இதனை மாணவர்கள் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.