Categories
மாநில செய்திகள்

இது வேற லெவல்!…. ரூ.‌ 300 கோடி நிதியில் கோவை ரயில் நிலையத்துக்கு வரப்போகும் மாற்றங்கள்….. புதிய அதிரடி…!!!!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனை டெல்லியில் நேரில் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்துள்ளார்‌. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மக்களின் தெற்கு ரயில்வே தொடர்பான பல்வேறு விதமான கோரிக்கைகளை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்‌. அதாவது ரயில் நிலையங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தையும் உலக தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் பிறகு வட கோவை ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங் வசதி மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும். இதனால் தமிழக மற்றும் கேரள மக்கள் பயன் பெறுவார்கள். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோயம்புத்தூர் வழியாக ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். அதன் பிறகு பெங்களூருக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும். இதேபோன்று கொரோனாவுக்கு முன்பாக இயக்கப்பட்ட பொள்ளாச்சி-கோவை ரயிலை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலக்கோட்டில் இருந்து கோவை வழியாக இயக்கப்பட்ட பாலக்கோடு-திருச்செந்தூர் வரை இயக்கப்பட்ட தினசரி ரயிலை மீண்டும் இயக்குவதற்கு தங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் வானதி சீனிவாசனின் கோரிக்கைகளை மத்திய அமைச்சர் நிறைவேற்றுவதாக உறுதி கொடுத்துள்ளார். மேலும் மத்திய அரசின் 300 கோடி ரூபாய் நிதி உதவியின் கீழ் வானதி சீனிவாசனின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் உறுதி கொடுத்துள்ளார்.

Categories

Tech |