Categories
மாநில செய்திகள்

“சாப்பாட்டுக்காக கடை கடையா அலைஞ்சேன்”….. அதுக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன்….. அண்ணாமலையின் நெகிழ்ச்சி பேச்சு….!!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ‌ இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் கரூரில் விவசாய குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங் படிப்பை முடித்தேன். நான் படிப்பை முடித்தவுடன் என்னுடைய குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் என்னுடைய படிப்புக்கும் நான் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று தோன்றியதால் நான் வேலைக்கு செல்லவில்லை. நான் சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைத்து லக்னோவில் 8.50 லட்சம் கடன் வாங்கினேன்.

இந்த பணத்தை வைத்து எம்பிஏ படித்தேன். அதன் பிறகு ஐபிஎஸ் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டே என்னுடைய செலவுகளை சமாளிப்பதற்காக ஒரு பயிற்சி வகுப்பில் வேலைக்கு சேர்ந்தேன். என்னுடைய செலவுகளை சமாளிப்பதற்காக இரவு நேரத்தில் சாப்பிடாமல் மதியம் முழு நேர சாப்பாடு கிடைக்கும் கடையை தேடி அலைவேன். இப்படி எல்லாம் என்னுடைய செலவுகளை குறைத்து கஷ்டப்பட்டு படித்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆனேன். கடந்த 2011-ம் ஆண்டு என்னுடன் யுபிஎஸ்சி தேர்வு எழுதியவர்களில் சிலர் தற்போது பல்வேறு விருதுகளை குவித்துள்ளனர்.

ஆனால் சிலர் ஊழல் வழக்கில் சிக்கி சிறையிலும் இருக்கிறார்கள். பலமுறை தேர்வு எழுதினால் உறவினர்களின் பழி சொல்லுக்கும் அவ சொல்லுக்கும் ஆளாக நேரிடும். நான் என்னுடைய அப்பாவிடம் இது பற்றி கூறிய போது நீ பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்து ஊருக்கு மட்டும் வந்து விடாதே என்று கூறினார். இது எனக்கு மிகவும் ஊக்கமாக இருந்தது. மேலும் மாணவர்கள் படிக்கும் காலங்களில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதோடு திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து கவனமாக படிக்க வேண்டும் என்று கூறினார். இவருடைய பேச்சு மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Categories

Tech |