தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதால் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தின் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியது, “பாட்டு செம மாஸ் பாடலாக இருக்கும். அஜித் சாருக்கு ஒரு ரசிகனாக என்ன பண்ணனும்னு நினைக்கிறேனோ, எந்த மாதிரி நடனம் இருக்கும்னு நினைக்கிறேனோ அதே பண்ணி இருக்கேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தல ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.