Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு BYE BYE …. ”வச்சு செய்யும் சமூக வலைத்தளம்” அரண்டு போன இம்ரான் ….!!

இப்படி எல்லாம் செஞ்சீங்க நாங்கள் முழுமையாக எங்களுடைய சேவையை நிறுத்தி விடுவோம் என்று பாகிஸ்தானுக்கு சமூக வலைத்தளங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு சமூக வலைத்தளம் , டிஜிட்டல் கம்பெனிக்கும்  புதிதாக ஒரு உத்தரவு விதித்திருந்தார்கள். அதாவது , சோசியல் மீடியாவில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க கூடிய கூகுள் , பேஸ்புக் , ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் எல்லாம் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில ஆய்வு நிறுவனகள் குறிப்பிட்டு சில தகவல்களை கேட்டால் அதை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

மேலும் குடிமக்களின் பாதுகாப்புக்கு சமூகவலைதள நிறுவனங்கள் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு அலுவலகத்தை போடவேண்டும் என்றும் 3 மாதத்திற்குள் இதனை அமுல் படுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 3 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று  அறிவித்திருந்தார்.

இதனால் பாகிஸ்தான் பிரதமருக்கு பிப்ரவரி 15ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் சார்பில் ஒரு லெட்டர் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த லெட்டரில் கூகுள் ,பேஸ்புக் ,ட்விட்டர், அமேசான் , தவிர டெக்னாலஜி சம்பந்தமான நிறுவனங்கள் எல்லாமே கையெழுத்து போட்டு இருந்தார்கள். அதில் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள இந்த தணிக்கை விதிகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் அலுவலகம் போடணும் , கேட்கும் தகவல்களை எல்லாத்தையும் தனிப்பட்ட முறையில் கொடுக்கணும்னு என்ற முடிவை திரும்பப் பெறவில்லை என்றால் எங்கள் சேவை நாங்கள் தரமாட்டோம் என்று சோசியல் மீடியாக்கள் எல்லாம் சேர்ந்து பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்கள்.

மேலும் பாகிஸ்தானில் சோசியல் மீடியாவை பயன்படுத்தக்கூடிய பயனாளர்களுக்கு எங்களால ஒரு சர்வீஸ்சும் கொடுக்க முடியாமல் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். சமூக வலைத்தளங்களின் ஒட்டு மொத்த எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தான் ஆடி போயுள்ளது.

Categories

Tech |