உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலுக்கு காமெடி நடிகரான யோகி பாபு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை புத்திர கவுண்டன் பாளையத்திலுள்ள முத்து மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை (146 அடி) உள்ளது. இக்கோவிலுக்கு ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் என சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்நிலையில் திரைப்பட காமெடி நடிகரான யோகி பாபு முத்துமலை முருகன் கோவிலுக்கு சஷ்டி நாட்களில் சுவாமி தரிசனம் செய்து வந்துள்ளார். எனவே கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் யோகி பாபு கோயில் வளாகத்தை சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் அவருடன் காமெடி நடிகர் கணேஷ் உள்ளிட்டோர் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.