தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டுக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது அவசர சடை சட்டம் இயற்றப்பட்ட நிலையில், அந்தச் சட்டம் அமலுக்கு வரும் தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால் வழக்கு தொடர எந்தவித காரணமும் இல்லை என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
அதோடு அவசர சட்டத்துக்கு பதில் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதன் காரணமாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டம் இயற்றப்படும் தேதி குறித்து அறிவிப்பு வெளியான பிறகு மீண்டும் வழக்கு தொடர்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை வாபஸ் வாங்குவதாக கூறினர். மேலும் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, சட்டம் அமலுக்கு வந்த பிறகு மீண்டும் வழக்கு தொடர்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.