இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமான கணக்கு வழக்குககளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோவில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதோடு நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை நடவடிக்கைக்கு உட்படுத்த சட்டத்தில் இடம் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் இந்த கோவிலானது நம் மண்ணை ஆண்ட மன்னர்களால் உருவாக்கப்பட்டது.
ஆனால் கோவிலின் கணக்கு வழக்குகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது தீச்சுதர்களின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிதம்பரம் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சட்டவிதிகள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் தமிழகத்தில் கோவில்களில் திருப்பணி நடைபெற்று வந்தாலும் கோவிலில் திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.