Categories
தேசிய செய்திகள்

சிறந்த வட்டி விகிதம்…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒரு ஆண்டு முதிர்வுகாலத்துடன் நிலையான வைப்புகளுக்கு, SBI பொது பிரிவினருக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்கக்களுக்கு 6.6 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது. ரூபாய்.2 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்கள் இவ்விகிதத்திற்கு உட்பட்டது.

ஐசிஐசிஐ வங்கி ஒரு ஆண்டு முதல் 389 நாட்கள் வரையிலான முதிர்வுக்காலத்துடன் நிலையான வைப்புகளை பொதுப்பிரிவினருக்கு 6.10% மற்றும் மூத்தநபர்களுக்கு 6.6 % வட்டி விகிதத்தில் வழங்குகிறது. ரூ.2 கோடிக்கு கீழுள்ள டெபாசிட்டுக்கு, இந்நிலையான வைப்பு விகிதமானது பொருந்துமென்று கூறப்பட்டுள்ளது.

HDFC வங்கி பிற கடன் வழங்குநர்களுடன் ஆன்லைனில் போட்டி விகிதத்தை பராமரித்து வருகிறது. ஒரு ஆண்டு முதல் 15 மாதங்கள் வரையிலான முதிர்வுக் காலத்துடன்கூடிய நிலையான வைப்புத் தொகைகளுக்கு, தனியார்துறை கடன் வழங்குபவர் பொது பிரிவினருக்கு 6.10 சதவீதம் மற்றும் மூத்த நபர்களுக்கு 6.6 சதவீதம் வட்டிவிகிதத்தை வழங்குகிறது.

AXIS வங்கி எந்தவொரு வங்கியிலும் ஒரு ஆண்டுக்கான டெபாசிட்களில் அதிக வருமானத்தை வழங்குகிறது. ஒரு ஆண்டு முதல் ஒரு வருடம் 5 நாட்களுக்கு இடைப்பட்ட நிலையான வைப்புகளில், பொதுமக்களுக்கு 6.25 சதவீதமும், மூத்தகுடிமக்களுக்கு 7 சதவீதமும் வங்கி வழங்குகிறது.

ஒரு ஆண்டு நிலையான வைப்புத் தொகைக்கு தபால்துறை 5.5 சதவீத வட்டி செலுத்துகிறது. அசல் காலத்துக்கு முதிர்ச்சியடைந்த பின் வைப்புத் தொகையாளரால் நேர வைப்புகணக்கு மேலும் நீட்டிக்கப்படலாம்.

Categories

Tech |