Categories
மாநில செய்திகள்

BREAKING : கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

 கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழ்நாடு சுகாதாரம், குடும்ப நலத்துறை செயலர் 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்க தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது மாநில மனித உரிமை ஆணையம். வீராங்கனை பிரியா மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு  ஆணையிடப்பட்டுள்ளது. மாநில மனித உரிமை ஆணைய தலைவர் எஸ் பாஸ்கரன் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

 

 

Categories

Tech |