கொரோனா வைரஸ் அமெரிக்காவின் தயாரிப்பு என்று ஈரான் நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகுக்கே மரண பீதி , காட்டி உயிர்பலி வாங்கும் கொரோனா வைரஸ் ஈரானையும் விட்டுவைக்கவில்லை. ஈரானில் 3513 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலால் பலி எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அந்நாட்டு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்த வைரஸ் பரவல் குறித்து ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐ.ஆர்.ஜி.சி) தலைவர் கூறியது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா வைரஸ் அமெரிக்க நாட்டின் உயிரியல் தாக்குதலின் விளைவு என்று அவர் தெரிவித்துள்ளார். பின்னர் இது சீனாவில் தொடங்கி , ஈரானுக்கு பரவிய பின்னர் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது என்று கூறியுள்ளார்.