பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேடை நிகழ்ச்சி ஒன்றினை நடத்துவதற்கு 20 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். அதோடு வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததாக கூறப்படும் நிலையில், சன்னிலியோன் மீது காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை சன்னிலியோன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான அளவு ஆதாரம் இல்லை என்று கூறினார்.
அதோடு இந்த வழக்கை நாள்பட இழுத்துக் கொண்டே போவதால் தனக்கு சொல்ல முடியாத அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சன்னி லியோன் கூறினார். இதைக்கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். மேலும் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை சன்னிலியோன் மீது எந்தவித குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.