Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலையில் இப்படி ஒரு மாற்றமா?…. அரசு எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…..!!!!

நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றி அரசு எண்ணெய் நிறுவனங்களானது பெரியமுடிவு ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் கேஸ்சிலிண்டரை வாங்குவதற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதனடிப்படையில் LPG சிலிண்டருக்குரிய தள்ளுபடியை ரத்துசெய்திருக்கிறது. ஆகவே இனி LPG புக்கிங் பண்ண கூடுதலாக பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு எண்ணெய் நிறுவனங்களானது வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய்.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்துவந்த நிலையில், இப்போது இச்சலுகை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வணிக சிலிண்டர்களுக்கு அதிகளவு தள்ளுபடி அளிப்பதாக விநியோகஸ்தர்கள் புகார்களை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முக்கிய முடிவு சென்ற நவம்பர் 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

Categories

Tech |