சென்னையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரன் காரணம் எனக் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேறியது. நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானம் நிறைவேற்றபட்டது.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதால் காங்கிரஸ் கட்சியின் இந்த நவடிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி, திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.