Categories
தேசிய செய்திகள்

பாலியல் தொல்லை…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி… பதற வைக்கும் சிசிடிவி காட்சி….!!!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 18 வயது சிறுமி நீட் பயிற்சி முடித்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் சையத் அக்பர் சிறுமியிடம் பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க சிறுமி ஆட்டோவில் இருந்து வெளியில் குதித்துள்ளார். இதனால் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கே இருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றி ஆட்டோ டிரைவர் சையத் அக்பரை கைது செய்தார். மேலும் அவர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories

Tech |