Categories
மாநில செய்திகள்

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்…. சென்னையில் போலீஸ் காருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்….!!!!

தமிழகத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் சில அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அபராதம் தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அவ்வகையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

அதனால் விபத்துக்களை குறைக்கும் நோக்கத்தில் தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.போக்குவரத்து விதிமுறைகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஏடிஜிபி அந்தஸ்து உடைய வாகனத்திற்கு போக்குவரத்து போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சமீபத்தில் ரமலான புதிய போக்குவரத்து விதிகளின்படி போக்குவரத்து விதியை மீறி ஒரு வழி பாதையில் எதிர் திசையில் சென்ற புகாரில் ஏடிஜிபி வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி பதவியில் இருப்பவர்களின் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது இதுவே முதல் முறை. இதன் மூலம் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என தெரிகிறது.

Categories

Tech |