தனுசு ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். தங்கள் சம்பாதித்த நிலை உயரும். வரவு திருப்திகரமாகவே இருக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். மிகவும் கடினமான செயல்களை கூட எளிதாக வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள், முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும், மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறுவார்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும்.
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். அதே போல தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மனதை மட்டும் நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு இரண்டு நிமிடம் தியானம் மேற்கொண்டு கல்வியை தொடருங்கள் சிறப்பாக இருக்கும். தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள், பழவகைகளை எடுத்துக்கொள்ளுங்கள், அதேபோல் தூங்க செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப நல்லது. நீங்கள் படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்