துலாம் ராசி அன்பர்களே..! இன்று புதிய வேலைக்கான வாய்ப்புகள் உருவாகும். அரசு வேலைக்கான அழைப்பு உங்களுக்கு வரலாம். மனைவி மூலம் பல செய்திகள் தோன்ற மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுகம், தனலாபம் இன்று ஏற்படும். உறவினர்களின் மூலம் நன்மையும் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைப்பதில் கொஞ்சம் கவனமாக இருங்கள், அந்த காரியத்தை நீங்களே செய்வது மிகவும் நல்லது. இன்று மாணவர்களுக்கு வெற்றிமேல் வெற்றி வந்து குவியும். நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடும். இன்று தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு இரண்டு நிமிடம் தியானம் மேற்கொண்டு பின்னர் பாடங்களைப் படியுங்கள். தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழவகைகளை எடுத்துக்கொள்ளுங்கள், தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்