Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எண்ணிய காரியங்கள் நடக்கும்….பொறுமையாக இருங்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று இஷ்டத்திற்கு மாறாக எண்ணிய காரியங்கள் அனைத்துமே சிறப்பாகவே நடக்கும். வீண் வழக்குகளை ஒத்தி போடுவது ரொம்ப நல்லது. வாகனம் வாங்க கூடிய யோகம் இன்று இருக்கும். உயரதிகாரியிடம் பணிவுடன் நடந்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கொஞ்சம் வரக்கூடும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் ஏற்படும். எல்லாவற்றிலும் ஒரு பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம், பொறுமையாகவும், நிதானமாகவும் படபடப்பு இல்லாமலும் காரியங்களைச் செய்யுங்கள், அது போதும்.

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாகத்தான் போராட வேண்டியிருக்கும். கடினப்பட்டு தான் படிக்க வேண்டி இருக்கும், படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். அதுமட்டுமில்லை தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மனநிலையை அமைதியாக வைத்துக்கொள்ள, இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களைப் படியுங்கள். படித்த பாடம் உடனே நினைவுக்கு நினைவில் இருக்கும். அதுபோலவே தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப நல்லது நீங்கள் படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக  கொடுங்கள். உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |