கடகம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றி செய்திகள் குவியும் நாளாகவே இருக்கும். வெற்றிகள் குவிவதால் மனதில் அன்பும் மகிழ்ச்சியும் இருக்கும். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியின் உதவிகள் உங்களுக்கு மனம் மகிழும் நாளாகவே இருக்கும். தன்னம்பிக்கையும் கூடும். வாக்குவாதங்கள், அடுத்தவர் பேச்சை விமர்சனம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. யாரைப்பற்றியும் இன்று நீங்கள் குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றிக்கு உதவியாக இருக்கும்.
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை இன்று நீங்கள் எழுதிப் பாருங்கள். அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை உங்களுடைய மனநிலையை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், இரண்டு நிமிடம் தியானம் இருங்கள், அது போதும். அதேபோல தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்துவது ரொம்ப நல்லது. படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: வட மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்