மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் வருகையால் உங்களுக்கு மனம் மகிழும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். அரசாங்கத்தின் மூலம் உங்களுக்கு லாபம் பன்மடங்கு உயரும், அந்தஸ்து உயரும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் கொஞ்சம் மெத்தன போக்கே காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும், முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அலைச்சலை இன்று முற்றிலும் தவிர்த்து விடுங்கள், தனவரவு சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் கூட ஓரளவு சீராக இருக்கும்.
சரியான நேரத்திற்கு மட்டும் தூங்கச் செல்லுங்கள், அது போதும். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாகவே உழைப்பார்கள், கல்வியில் வெற்றியும் பெறுவார்கள். தேர்வில் மதிப்பெண்களையும் நல்லபடியாகவே எடுப்பார்கள். தேர்வு முடியும் வரை மாணவர்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும், முடிந்தால் இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு. அதேபோல தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை தவிர்த்துவிட்டு, பழங்களை சாப்பிடுவது ரொம்ப நல்லது .
இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்