நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 0.30 சதவீதம் வரை வட்டியை உயர்த்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏழு முதல் 29 நாட்களுக்கு 3 சதவீதமாகவும், ஒரு வருடம் முதல் 15 மாதம் வரை 6.10 சதவீதமாகவும், இரண்டு ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை 6.50 சதவீதமாகவும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசனுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகின்றது. இந்த வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.