தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதேசமயம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்கியது. தற்போது மழை அளவு ஓரளவு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்று சுழற்சியால் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரங்களுக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெற உள்ளது. தமிழகத்திற்கு இன்னும் அதிக மழையை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.