பிக் பாஸ் சீசன் 6-ல் இன்றைய பிரேமாக்களை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 6-ல் கமல் சார் சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் கொடுத்த டோஸ்ஸில் அசீம் கொஞ்சம் அடக்கி வாசித்தார். தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சில பல பிரச்சனைகளை உண்டாக்கி வருகிறார் அசீம். இதனை தொடர்ந்து சகப் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற சில்லித்தனமான விஷயங்களை செய்து வருகின்றார். பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த ரசிகர்கள் அசீமுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்புங்கள் என்று கோரிக்கையை விடுத்துள்ளனர்.
ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக மட்டுமே அவரே பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்துள்ளனர். இது குறித்து மைனா மற்றும் ஆயிஷா கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசியதாவது, “அசீம் திருந்தியது போல் நடிக்கிறார். ரொம்ப நாளுக்கு நடிக்க முடியாது. மீண்டும் தனது சுய ரூபத்தை காட்டுவார் என்றும் சக போட்டியாளர்களிடம் மனிதத் தன்மையை இல்லாமல் நடந்து கொள்கின்றார் அசீம்” என்று அவர்கள் பேசியுள்ளனர். மேலும் இன்று வெளியான பிக் பாஸ் ப்ரோமோக்களில் அசீம் நடந்து கொண்ட விதத்தை பார்த்த ரசிகர்கள் அவர் திருந்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றி விடுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.