உடல் எடையை எப்படி குறைப்பது ரொம்ப எளிமையான ஒரு முறை, சிம்பிளான ஒரு ஜூஸ் குடிப்பது தான். நம உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும்..!
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – சின்ன துண்டு
தண்ணீர் – அரை டம்ளர்
எலுமிச்சை – பாதி
செய்முறை:
ஒரு வெள்ளரிக்காய் தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள், பாதி வெள்ளரிக்காய் போதும். தோல் சீவி சின்ன, சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரிக்காய் மிக்ஸரில் போட்டு, கொத்தமல்லி சிறிதளவு, இஞ்சி சின்ன துண்டு, தண்ணீர் அரை டம்ளர் போட்டு ஜூஸ் மாதிரி அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஜூஸை வடிகட்டி அதில் ஒரு எலுமிச்சம் பழத்தில் பாதியை நறுக்கி பிழிந்து விட்டு,நன்றாக கலக்கிவிடுங்கள். இப்பொழுது எலுமிச்சம்பழச்சாறு, வெள்ளரிக்காய் ஜூஸ் கலந்து உடல் எடை குடிப்பதால் உடல் துடை விரைவில் குறைந்து விடும். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன் இதை குடித்து வாருங்கள்.