Categories
Tech டெக்னாலஜி

WhatsApp அழைப்புகளை ரெக்கார்டு செய்யலாம்?…. அதுவும் ஈஸியா…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

Whatsapp-ல் அழைப்பு பதிவு அம்சமில்லை. ஆகவே நீங்கள் வாட்ஸ்அப் அழைப்பை பதிவுசெய்ய விரும்பினால், 3ஆம் தரப்பு ஆப்களை பயன்படுத்த வேண்டும். உங்களது ஆண்ட்ராய்டு போன்களில் Whatsapp அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம்.

# Google play store-ல் இருந்து கியூப்கால் ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

# அவ்வாறு அந்த செயலியை பதிவிறக்கம் செய்ததும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப்பைத் திறக்க வேண்டும்.

# தற்போது வாட்ஸ்அப்பில் நீங்கள் அழைப்பை மேற்கொள்ளும்போது (அ) பெறும்போது கியூப் கால் விட்ஜெட் தெரியும்.

# விட்ஜெட் தெரியவில்லை எனில், கியூப் கால் பயன்பாட்டைத் திறந்து குரல் விசைக்கு Force VoIP என்பதைத் கிளிக் செய்யவேண்டும்.

# இச்செயல்முறையைச் செய்தபின், பயன்பாடு தானாகவே வாட்ஸ்அப் குரல் அழைப்பைப் பதிவுசெய்யும். பின் பதிவுகள் உள்நினைவகத்தில் சேமிக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.

 

Categories

Tech |