செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சத்யசிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் “நான் மிருகமாய் மாற” படம் நவம்பர் 18ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஹரிப்ரியா நாயகியாக நடித்து இருக்கிறார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் வாயிலாக தமிழில் நடிக்கிறார். இந்த படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இதையடுத்து நாயகி ஹரிப்ரியா பேசியதாவது, செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடைசியாக 2010 ஆம் வருடம் வல்லக்கோட்டை படம் நடித்தேன். அதன்பின் பல கன்னட படங்களில் நடித்து உள்ளேன். இதனிடையில் மீண்டுமாக தமிழில் நடிக்க ஒரு சரியான கதை மற்றும் குழுவிற்காக காத்திருந்தேன். அப்போது தான் டிரைக்டர் சத்யசிவா, என் கன்னட திரைப்படமான பெல்பாட்டம் படத்தினை பார்த்து இந்த திரைப்படத்திற்காக அணுகினார்.
கதை மிகவும் பிடித்துபோக உடனே சம்மதித்தேன். இப்படத்திற்கு தமிழ்நாட்டு மட்டுமின்றி கர்நாடகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் சசி குமாரின் மனைவியாக நடித்திருக்கிறேன். முதலில் என்னை அணுகும்போது படத்தில் எனக்கு ஒரு 6 வயது குழந்தை இருப்பதாக கூறினர். எப்போதும் புதியதாக ஒன்றை முயற்சிசெய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். ஆகவே இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தேன்” என்று பேசினார்.