Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் வருகிறது ’ஒரே நாடு, ஒரே சார்ஜர்’ திட்டம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் லேப்டாப், மொபைல் உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் ஒரே சார்ஜர் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனை விரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 3000 கிலோ டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அதில் வெறும் 30 கிலோ டன் மட்டுமே முறையாக சேகரிக்கப்பட்டது. எனவே மின்னணு கழிவுகளை குறைப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டாலும் இதனால் ஐபோன் மற்றும் குறைந்த விலையில் மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே சார்ஜர் என்ற திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

Categories

Tech |