இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதுகெலும்பாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளது. இதில் களப்பணியில் மட்டும் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 67,956 கி.மீ. தூர இரும்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கொரோனா பிரச்சனை காரணமாக ஊழியர்களின் கோரிக்கை குறித்த முடிவுகள் தள்ளி போய் வந்தது. இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசு முடிவெடுத்து உள்ளதாக ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு மூலம் மாதம் ரூ.2500 முதல் ரூ.4000 வரை கூடுதல் ஊதியம் உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.