தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்த மாதம் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் 21ஆம் தேதி காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.