எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு இச்செய்தி மகிழ்ச்சியை அளிக்கும். க்யூஆர் குறியீடு உடைய சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் சிலிண்டரைக் கண்காணிக்கவும், டிரேஸ் செய்யவும் இயலும். இந்தியன் ஆயில் (IOCL) தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, அடுத்த 3 மாதங்களில் அனைத்து வீட்டு எரிவாயு சிலிண்டர்களிலும் QR குறியீடு இருக்கும் என தெரிவித்தார்.
2022ம் வருடத்தின் உலக எல்பிஜி வாரத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டர்களைக் கண்காணிக்க முடியும் என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒரு புரட்சிகரமான மாற்றம் என மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.